உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர மாவட்ட செயலாளர் முகேஷ்மூர்த்தியார் தலைமை தாங்கினார். சட்டசபை தொகுதி செயலாளர்கள் சங்கரலிங்கம், பழனிவேல், ஸ்டாலின், ராஜகீர்த்தி முன்னிலை வகித்தனர். பண்ருட்டி சட்டசபை தொகுதி செயலாளர் விக்கிதுரை வரவேற்றார். மாநில செயலாளர் வின்சென்ட், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம் கண்டன உரையாற்றினர். இதில், தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து நடந்து வரும் கொலை, கொள்ளை,கற்பழிப்பு, பாலியல் சீண்டல்கள், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை ஆகியவற்றை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை