உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

விருதை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

விருத்தாசலம்: மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி, விருத்தாசலம் நீதிமன்ற வாளாகம் முன், வழக்கறிஞர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு, அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். ஜாக் பொறுப்பாளர் மூத்த வழக்கறிஞர் ராஜீ, செல்வபாரதி, புஷ்பதேவன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர்கள் ஆனந்த கண்ணன், காசி விஸ்வநாதன், ராம செந்தில், குமரகுரு, சம்பத், சரவணன், காமராஜ், பெண் வழக்கறிஞர்கள் ஜென்னி, காயத்ரி மற்றும் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை