உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

வள்ளி விலாஸ் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில்  பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  பள்ளி தாளாளர் இந்துமதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் மீனா , சிங்கப்பெண் அதிரடி படை குழுவினருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சிங்கப்பெண் அதிரடி படை குழுவினர், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ