மேலும் செய்திகள்
காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்
15-Sep-2024
சிதம்பரம், : சிதம்பரத்தில் பைக் திருடனை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்தவர் குமரவேலு. இவர், கடந்த 14ம் தேதி, பகல் 12 மணியளவில் தனது பைக்கை மேல வீதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். மாலை 7:00 மணியளவில் வந்து பார்த்தபோது, காணவில்லை. இதுகுறித்து, சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார், அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.அதில், சிதம்பரம் அடுத்துள்ள சிவபுரி வடபாதி ரோடு உத்திராபதி மகன் ஐயப்பன்,30; என்பவர், குமரவேலு பைக்கை திருடி சென்றது தெரியவந்து. மறுநாள் ஐயப்பனை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் திருடனை போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
15-Sep-2024