வீராணம் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு
சேத்தியாத்தோப்பு; வீராணம் ஏரியில் வனத்துறையினர் கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி லால்பேட்டை வரை 14 கிலோ மீட்டர் நீளமும், 5 கிலோ மீட்டர் அகலத்துடன் உள்ளது.ஏரியில் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் தேக்கி முழுகொள்ளவினை பொதுப்பணித்துறை பராமரித்து வருகின்றது. ஏரியில் உள்ள மரங்களில் தங்கி, முட்டையிட்டு குஞ்சி பொறிக்க ஏராளமான வெளி நாட்டு பறவைகள் வரத்து துவங்கியுள்ளது.கோடை காலம் துவங்கும் நிலையில வீராணம் ஏரிக்கு வரும் பறவைகள் குறித்த கணக்கெடுக்க, சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்தபாஸ்கரன் தலைமையில் வனவர் பன்னீர்செல்வம், புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகரன், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி மற்றும் தனியார் கல்லுாரி மாணவர்கள், பூதங்குடியில் துவங்கி லால்பேட்டை வரை ஏரியில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பில் பெரிய கொக்குகள், சாம்பள் நிற கொக்குகள், வெள்ளை நாரை, கருப்பு நாரைகள், பச்சை கிளி, நீர் பறவைகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.