உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் பா.ஜ., பேரணி

புவனகிரியில் பா.ஜ., பேரணி

புவனகிரி : புவனகிரியில், சுதந்திர தினத்தையொட்டி, பா.ஜ., சார்பில் பைக் பேரணி நடந்தது.பாலக்கரையில் துவங்கிய பேரணிக்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் லட்சுமி நரசிம்மன், நாகராஜன், சந்தோஷ்குமார், சக்திவேல், தியாகு முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக தேசிய உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.பேரணியில் வழக்கறிஞர் பிரிவு கேசவன், நிர்வாகிகள் சின்னதுரை, நடராஜன், ரவிச்சந்திரன், பழனி, இளையமாறன், மதிவாணன், சக்திவேல், ஞானசபாபதி, அரவிந்தன், பழனியப்பன், சண்முகம், ராஜேந்திரன்,நாராயணன், இளங்கோவன், கந்தசாமி, ராஜராஜன், திருமூர்த்தி, நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மகளிர் அணி சாந்தலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி