மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்
கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் எதிரில் துவங்கியது.தமிழக பா.ஜ., சார்பில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, சமக்கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.நேற்று கடலுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட பா.ஜ.,தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஓ.பி.சி., அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் துவக்கி வைத்தனர். மாநகர தலைவர்கள் கடலுார் மேற்கு அருண், கடலுார் கிழக்கு பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.