மேலும் செய்திகள்
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்
07-Mar-2025
புவுனகிரி: பா.ஜ., சார்பில் 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற தலைப்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக புவனகிரியில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.புவனகிரி பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமாவளவன் வரவேற்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஸ்ரீதரன், சரவணக்குமார், கோபிநாத்கணேசன், வெற்றிவேல், ரமேஷ், ராகேஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் நடராஜ், சாந்தலட்சுமி, தியாகு, முருகன், கோசலை, சுஜாதா, கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய துணை தலைவர் லட்சுமி நரசிம்மன் நன்றி கூறினார்.
07-Mar-2025