உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் எஸ்.எல்.நகர் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கடலுார் அரசு மருத்துவமனை சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தானம் முகாம் நடந்தது.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் முகாமை துவக்கி வைத்து ரத்ததானம் செய்தவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மாவட்ட தலைவர் முகமது யாசின், செயலாளர் அப்துல்வஹாப், பொருளாளர் அப்துல் காதர், துணைத் தலைவர் யாசர்அராபத், துணைச் செயலாளர் உபைதுல்லா, கிளைச் செயலாளர் உமர்பாரூக் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ