உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க, வேட்பாளர் அறிமுகம்; நிறுவனர் ராமதாஸ் பங் கேற்பு

பா.ம.க, வேட்பாளர் அறிமுகம்; நிறுவனர் ராமதாஸ் பங் கேற்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் வானொலி திடலில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பா.ம.க., மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, மாநில இளைஞர் சங்க செயலாளர் சுரேஷ், மாநில மகளிர் சங்க செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, சிலம்பு செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு, வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து பிரசாரம் செய்தார்.முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருஞானம், நகர செயலாளர் முருகன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் மற்றும் பா.ஜ., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை