உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்கள், உடல் தானம்  

கண்கள், உடல் தானம்  

சிதம்பரம் : முதியவரின் கண் மற்றும் உடல் தானமாக வழங்கப்பட்டது.மயிலாடுதுறை செட்டித்தெருவை சேர்ந்தவர் சிவா என்கிற ராமமூர்த்தி, 85; இவர் கடந்த 8ம் தேதி, இறந்தார். இதையடுத்து, அவரது உடல் மற்றும் கண்கள் ஆகியவற்றை தானம் செய்ய, குடும்பத்தினர் முடிவு செய்தனர். கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் சென்னை மதுரவாயல் லலிதாம்பிகை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பிற்காக தானமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகம் தலைவர் ராமச்சந்திரன், சரத் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ