உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த தீவளூரில் அய்யனார் கோவில் மற்றும் கொப்பாட்டி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 7:00 மணியளவில் கோவிலைத் திறக்க பூசாரி வந்தபோது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 குத்து விளக்குகள், 5 பித்தளை மணி மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடு போயிருப்பது தெரியவந்தது.தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ