மேலும் செய்திகள்
பைக் மோதி பெண் பலி
28-Jul-2026
கடலுார்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கொத்தனார் இறந்தார். கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் தமிழ்வாணன்,22; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு கடலுார், சாவடி பைபாஸ் வழியாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Jul-2026