உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விடுமுறை தராத அதிகாரியின் ஸ்கூட்டர் எரிப்பு; தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கைது

விடுமுறை தராத அதிகாரியின் ஸ்கூட்டர் எரிப்பு; தீயணைப்பு வீரர்கள் 2 பேர் கைது

பண்ருட்டி : விடுமுறை தராத அதிகாரியின் ஸ்கூட்டரை தீயிட்டு எரித்த தீயணைப்பு வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன்,55; இவரது ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் நிலைய வளாகத்தில் உள்ள அவரது குடியிருப்பின் முன் கடந்த 26ம் தேதி இரவு நிறுத்தியிருந்தார்.மறுநாள் 27ம் தேதி காலை ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து வேல்முருகன் பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், கடந்த 26ம் தேதி நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுாரை சேர்ந்த தீயணைப்பு வீரர் அருள்பிரகாஷ், 37; ஸ்கூட்டரை திருடிச் சென்றது தெரியவந்தது.அவரிடம் நடத்திய விசாரணையில், நிலைய அலுவலர் வேல்முருகன் விடுமுறை வழங்காத ஆத்திரத்தில் அருள்பிரகாஷ் ் மற்றொரு தீயணைப்பு வீரர் அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன்,30; ஆகியோர் சேர்ந்து வேல்முருகன் ஸ்கூட்டரை திருடிச் சென்று எரித்ததை ஒப்புக்கொண்டனர்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து , தீயணைப்பு வீரர்கள் அருள்பிரகாஷ், குமரேசன் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை