பஸ் கண்ணாடி சேதம் கண்டக்டர் மீது வழக்கு
கடலுார் : தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த கண்டக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கடலுார், சாவடியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர், தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்த நிலையில், திடீரென வேலையை விட்டு நிறுத்தப்பட்டார்.இதனால், ஆத்திரமடைந்த அவர் கடலுார் பஸ் நிலையத்தில் தான் பணியாற்றிய தனியார் பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, பணியில் இருந்த கண்டக்டர் வடுகப்பாளையத்தை சேர்ந்த பத்மநாபனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சாந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.