மத்திய பாதுகாப்பு படை வீரரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
புதுச்சத்திரம்; கடலில் சிக்கிய பள்ளி மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரரை தாக்கிய, 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலு மகன் ஸ்டீபன்ராஜ், 34; மத்திய பாதுகாப்பு படை வீரர். இவர் நேற்று முன்தினம் பெரியக்குப்பம் கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவியை மீட்டு, அவரது தம்பி திவாகருடன், மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, எதிரில் வந்த கம்பளிமேட்டை சேர்ந்த, 10 பேர் பைக்கை வழிமறித்து தகராறு செய்து, ஸ்டீபன்ராஜ், திவாகரை தாக்கி பைக்கை சேதப்படுத்தினர்.புகாரின்பேரில், கம்பளிமேட்டை சேர்ந்த 10 பேர் மீது புதுச்சேத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.