ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு சான்றிதழ்
சிதம்பரம் : கற்றல் முகாமில் கலந்து கொண்ட ஜே.ஆர்.சி., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி., மாணவர்கள், பு.முட்லுாரில் உள்ள அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 2024- - 25ம் ஆண்டிற்கான ஒரு நாள் கற்றல் முகாமில் பங்கேற்றனர்.முகாமில் பங்கேற்ற ஜே.ஆர்.சி., மாணவர்களை வீனஸ் குழுமப் பள்ளி தாளாளர் வீனஸ் குமார், துணை தாளாளர் ரூபியாள் ராணி பாராட்டி சான்றிதழ் வழங்கினர். பள்ளி முதல்வர் நரேந்திரன் ஜே.ஆர்.சி., ஆலோசகர் ரேணுகா உடனிருந்தனர்.