நெஞ்சு வலி: எஸ்.ஐ., சாவு
பண்ருட்டி : பண்ருட்டியில் நெஞ்சுவலியால் சப் இன்ஸ்பெக்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுக்கா. பசுமாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 59; இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டத்தில் பணிபுரிந்த காந்தி, கடந்த 2024 செப்டம்பர் மாதம் பண்ருட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் போலீஸ் குடியிருப்பில் இருந்து, பணிக்கு கிளம்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காந்தி இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.