முதல்வர் ஸ்டாலினுக்கு விருதையில் வரவேற்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., வினர் வரவேற்பு அளித்தனர்.விருத்தாசலம் அடுத்த திருப்பெயரில் நடந்த 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நெய்வேலியில், இருந்து விருத்தாசலம் வழியாக முதல்வர் ஸ்டாலின் நேற்றுசென்றார்.அப்போது, காலை 10:30 மணியளவில் விருத்தாசலம் வந்தடைந்த அவருக்கு, பெரியார் நகரில், அமைச்சர் கணேசன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையிலும், ஸ்டேட் பாங்க் அருகே முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், பாலக்கரை பகுதியில் நகர செயலர் தண்டபாணி, கடைவீதியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், மேற்கு கோட்டை வீதியில் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி,நீதிமன்ற வளாகம் அருகே நகர துணை செயலர் ராமு, சேலம் மேம்பாலம் அருகே ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல் ஆகியோரது தலைமையில் அந்தந்த பகுதிகளில் மேடை அமைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.