முதல்வர் பிறந்தநாள்
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது.தேரடி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கி, கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி, உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது, நிர்வாகிகள் திருவள்ளுவன், சின்னதுரை, குமணன், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோன்று, மலையனூர், பனையாந்தூர் ஊராட்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது.