உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்ளிடக்கரை மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கொள்ளிடக்கரை மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கடலுார் : கொள்ளிடம் ஆற்றில் எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி கொள்ளிக்கரை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் வரத்து இருப்பதால், அணை நிரம்பும் நிலையில் உள்ளது.அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதும், உபரி நீர் எந்த நேரத்திலும் திறந்துவிடப்படும் நிலை உள்ளது. அதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சார்ந்த தாழ்வான கிராமப் பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும்.மேலும் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீர்நிலைகளை கடத்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்வழிகள் வழியாக கொண்டு செல்லுதல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்கள், செல்பி எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி