உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சக்தி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

சக்தி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பண்ருட்டி: =பண்ருட்டி காமராஜர் நகர் ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.பண்ருட்டி, காமராஜ் நகர், ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவ கொடியேற்று விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து, மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கொடிமரம் அருகே முஷீக வாகனத்தில் உற்சவர் சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 7:00 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து, 7:30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இரவு உற்சவர் மூஷிக வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் செந்தில்முருகன், பொருளாளர் சீனுவாசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி