மேலும் செய்திகள்
பிலிப்பைன்ஸ் பெண்களின் கடற்கன்னி அவதாரம்!
06-Oct-2024
கடலுார்: இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடு வாங்கித் தருவதாகக் கூறி தனியார் நிதி நிறுவனத்தில் மோசடியாக கடன் வாங்கியுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட் டுள்ளது.பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பு மக்கள் கொடுத்துள்ள மனு:திருவதிகை செட்டிப்பட்டறை காலனியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் மேஸ்திரியிடம், நாங்கள் கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறோம்.எங்கள் பகுதியை சேர் இருவர் எங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு வாங்கித்தருவதாக கூறினர்.இதற்காக எங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை பெற்றுக் கொண்டனர். பின், மோசடியாக ஆவணங்களை உருவாக்கி பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் எங்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.அதற்கான தவணை தொகையை இருவரும் கடந்த 7 மாதங்களாக செலுத்தி வந்துள்ளனர். அக்டோபர் மாத தவணை தொகையை இருவரும் செலுத்தாததால், நிதி நிறுவன ஏஜன்ட்டுகள் உங்கள் பெயரில் தான் கடன் உள்ளது என எங்களை பணம் செலுத்தும்படி கூறுகின்றனர்.இது குறித்து கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.எனவே, எங்கள் பெயரில் கடன் பெற்று மோசடி யில் ஈடுபட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
06-Oct-2024