| ADDED : மே 28, 2024 05:23 AM
பண்ருட்டி, : பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி பணி நிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், கடலூர் மாவட்டம் கல்வி அலுவலர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் கலைச்செல்வி, ஹேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் லோகநாதன், பள்ளி வளர்ச்சி குழு துணைத் தலைவர் பழனி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார்.விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜாகீர்உசேன், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன். நடுவீரப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் சிறப்புரையாற்றினர்.இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், மீனாம்பிகை, சிவக்குமார், முருகையன், உமாசங்கர், ஹேமலதா, செல்வி, ராஜேந்திரன்,தட்சிணாமூர்த்தி, உள்ளிட்டோர் பேசினர். தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி ஏற்புரை ஆற்றினார்.தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா நன்றி கூறினார். பள்ளிக்கலையாசிரியர் . முத்துக்குமரன் தொகுத்து வழங்கினார்.