உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் மருத்துவக் கல்லுாரியில் இயன்முறை மருத்துவ பயிலரங்கம்

சிதம்பரம் மருத்துவக் கல்லுாரியில் இயன்முறை மருத்துவ பயிலரங்கம்

சிதம்பரம், : சிதம்பரம், மாவட்ட மருத்துவ கல்லுாரியில் இயன்முறை மருத்துவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.மருத்துவக்கல்லுாரி இயன்முறை துறைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மருத்துவ கல்லூரி முதல்வர் திருப்பதி தலைமை தாங்கி பயிலரங்கை துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.அமெரிக்காவை சேர்ந்த ஈஸ்வரி கிருபாசங்கர் பங்கேற்று, உலக அளவில், 20 முதல் 30 சதவீதம் முதியோர் கீழே விழுந்து, எலும்பு முறிவு பாதிப்படைகின்றனர். உணர்வு செயலாக்க கோளாறுகளால் ஏற்படும் தடுமாற்றம், மாதவிடாய் காலத்திற்கு பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், எலும்பு அடர்த்தியை பாதிக்கும் பிரச்னைகளை குறித்து விளக்கம் அளித்தார்.பயிலரங்கில் கல்லுாரி துணை முதல்வர்கள் சசிகலா, பாலாஜி சுவாமிநாதன், துறைத் தலைவர்கள் கவியரசன், தன்பால் சிங் பேசினர்.தொழில்முறை சிகிச்சை தலைவர் ஸ்ரீவித்யா பங்குபெற்றார். பேராசிரியர்கள் மணிமொழி, மேனகா, ஹேமசித்ரா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பேராசிரியர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.250 மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை