விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தில் தம்பதி தர்ணா
விருத்தாசலம்: விருத்தாசலம் தாசில்தார் அலுவலகம் முன்பு, பட்டா மாற்றம் செய்யக்கோரி தேசிய கொடியை கையில் ஏந்தி,தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி சாந்தி. இவர்கள், கூட்டு பட்டாவில் உள்ள தங்களுக்கு சொந்தமான 26 சென்ட் இடத்தை பட்டா பிரித்து கொடுக்க விருத்தாசலம் ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலக்தில் பல முறை மனு அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து கடந்த வாரம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.ஆனால், இதுவரை நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த தம்பதிநேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.துணை வருவாய்துறை அதிகாரிகள் அவர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதன்பேரில் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.