உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் கூட்டுறவு வங்கியில் வைப்பு தொகை சேகரிப்பு விழா

கடலுார் கூட்டுறவு வங்கியில் வைப்பு தொகை சேகரிப்பு விழா

கடலுார் : கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், சிறப்பு வைப்பு தொகை சேகரிப்பு விழா நடந்தது.கடலுார் வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, வங்கி மேலாண் இயக்குநர் கோமதி தலைமை தாங்கினார்.பின், அவர் கூறுகையில், நேற்று 16ம் தேதி முதல் வரும் அக்., 31ம் தேதி வரை (365 நாட்களுக்கு) வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புகளுக்கு விழா கால சிறப்பு வட்டி விகிதமாக தனிநபர் வைப்புகளுக்கு 7.75 சதவீதமும், ரூபாய் ஒரு கோடிக்கு மேலான வைப்புகளுக்கு 8.15 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதமும் வழங்கப்படும். இதை பயன்படுத்தி 32 கிளை மேலாளர்களும் அதிக வைப்பு நிதிகளை திரட்டவும், பொதுமக்கள் தங்கள் நிதிகளை அருகில் உள்ள கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் முதலீடு செய்து பயன்பெறலாம் என்றார்.மூத்த வாடிக்கையாளர் ஜெகதீசன் பேசுகையில், வணிக வங்கிகளை காட்டிலும் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதலீடுகளுக்கு வட்டி வகிதம் அதிகம் தருவதாக கூறினார்.அப்போது, வங்கி உதவி பொது மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையக கிளை மேலாளர் சாந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ