உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலர் மணிகண்டன், மாவட்ட துணை செயலலர் சிதம்பர பாரதி, வட்ட தலைவர் ராஜதுரை, வட்ட செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் விருத்தாசலம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த பேச்சு வார்த்தையை உடனே நிறைவேற்ற வேண்டும்.டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களை போல கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வீஸ் பணிக்கு உரிய தொகையை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !