உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுாரில் மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில் மா.கம்யூ., கட்சி சார்பில் மின் விசிறி கள், மிக்ஸி, கணினி, ஏர்கூலர் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு மாலை அணிவித்து நுாதன கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் கண்டன உரையாற்றினார். இதில், மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மின்சார வாரியத்தை பல கம்பெனிகளாக பிரித்து ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தி தனியார் கொள்ளைக்கு வழிவகுக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, மாவட்ட செயற்குழு மருதவாணன், ராஜேஷ்கண்ணன், மாவட்ட குழு ஆளவந்தார், பழனிவேல், பக்கீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை