உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையம் பள்ளியில் சைக்கிள் வழங்கல்

சி.என்.பாளையம் பள்ளியில் சைக்கிள் வழங்கல்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். திமு.க., ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணித் தலைவர் வைத்திலிங்கம், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் விஜயராகவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் சுப்ரமணியன் கலந்து கொண்டு பிளஸ் 1 மாணவிகள் 66 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை