உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

கிள்ளை, : சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சியில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், இளைஞரணி மற்றும் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். சேர்மன் கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி, துணை செயலாளர்கள் பொன்னுசாமி, சதா இளவரசு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சுப்பு வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மற்றும் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் துவக்கி வைத்தார். முகாமில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கணைப்பாளர் ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு, ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன்தாஸ், ஜெயந்தி சாமிதுரை, நிர்வாகிகள் முத்துவேல், அன்புசெல்வன், திருமாறன், அப்துல் சலீம், காதர் மஸ்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை