உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கோல்கட்டாவில் அரசு மருத்துவமனை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடலுாரில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்க கடலுார் கிளை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் வினோத்குமார், மூத்த டாக்டர் ஸ்டான்லி சந்திரன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.டாக்டர்கள் இளந்திரையன், ரேணுகாதேவி, கிருஷ்ணன், பாபு மற்றும் அரசு மருத்துவமனை முதுநிலை பயிற்சிபெறும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ