| ADDED : ஜூன் 28, 2024 01:00 AM
நெய்வேலி: நெய்வேலியில், சர்வதேச போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.என்.எல்.சி., மருத்துவமனை மற்றும் என்.எல்.சி., கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த பேரணிக்கு, என்.எல்..சி., மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். மனநலத்துறை டாக்டர் விஜயகுமாரி வரவேற்றார். நிறுவன மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நெய்வேலி டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் சுதாகர் , செந்தில்குமார், என்.எல்.சி., கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பொது மேலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.பேரணியில், நெய்வேலி பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, போதைபொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.என்.எல்.சி., மத்திய நூலகத்தில் இருந்து துவங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மெயின் பஜார் காந்தி சிலை அருகே முடிந்தது.