உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறிஞ்சிப்பாடியில் முதியவருக்கு கத்தி வெட்டு; 4 பேர் கொண்ட கும்பலில் இருவர் சிக்கினர்

குறிஞ்சிப்பாடியில் முதியவருக்கு கத்தி வெட்டு; 4 பேர் கொண்ட கும்பலில் இருவர் சிக்கினர்

குறிஞ்சிப்பாடி; வயலில் படுத்து துாங்கிய முதியவரை ஆள் மாறாட்டத்தில் வெட்டிவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பலில், இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிஞ்சிப்பாடி அடுத்த கு.நெல்லிக்குப்பம், கோபால் பிள்ளை வீதியை சேர்ந்தவர் குமார், 64; நேற்று முன்தினம் தனது வயல் கொட்டகையில் காவலுக்கு படுத்திருந்தார். அப்போது இரவு 11:30 மணிக்கு வயல் பகுதியில் கட்டி வைத்திருந்த கால்நடைகள் ஆங்கு இங்கும் ஓடி சத்தம் எழுப்பியது. குமார் எழுந்து பார்த்தபோது, 4 நபர்கள் கால்நடைகளை விரட்டி கொண்டிருந்தனர். யார் நீங்கள் என விசாரிப்பதிற்குள், ராகுல் நீ தானா என கேட்டு தகராறு செய்து, தங்கள் தயராக கொண்டு வந்த கத்தியால் குமாரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. படுகாயம் அடைந்த முதியவர் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, வடலுார் ஆபத்தாரணபுரம், பாட்டை வீதியை சேர்ந்த தியாகு, செந்தில்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், ராகுல் தரப்பிற்கும் தியாகு, செந்தில்குமார் தரப்பிற்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இதில் ராகுலை கொலை செய்ய திட்டமிட்டு தேடி சென்ற கும்பல், ராகுலுக்கு பதிலாக ஆள் மாறி குமாரை வெட்டியுள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை