உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர்தல் அலுவலர்களுக்கு 24ல் பயிற்சி தவறாது; பங்கேற்க உத்தரவு

தேர்தல் அலுவலர்களுக்கு 24ல் பயிற்சி தவறாது; பங்கேற்க உத்தரவு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வரும் 24ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர் மற்றும் சிதம்பரம் லோக்சபா தொகுதியில், 9 சட்டசபை தொகுதிகள் வருகிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 24ம் காலை 10:00 மணி மற்றும் மதியம் 2:00 மணி என இரண்டு கட்டமாக நடக்கிறது.பயிற்சி வகுப்புகள் திட்டக்குடி (தனி) தொகுதிக்கு திட்டக்குடி பெருமுளை ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. விருத்தாசலம் தொகுதிக்கு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி. நெய்வேலி தொகுதிக்கு நெய்வேலி ஜவஹர் அறிவியல் கலைக் கல்லூரி. பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டி ஜான்டூயி தொடக்கப்பள்ளி. கடலூர் தொகுதிக்கு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி. புவனகிரி தொகுதிக்கு புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. சிதம்பரம் தொகுதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம், குமாரராஜா முத்தையா கட்டடம் டெக்பார்க். காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதிக்கு காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அனைவரும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பயிற்சி மையத்தில் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும். அன்றே அலுவலர்கள் தபால் வாக்கு படிவத்தை பூர்த்தி செய்து பயிற்சி சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ