உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்தநாள் விழா

மாஜி., அமைச்சர் சம்பத் பிறந்தநாள் விழா

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பிறந்தநாளையொட்டி, கடலுார் மாவட்ட ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர், தொரப்பாடி பேரூராட்சியில்அன்னதானம், 500 மகளிருக்கு புடவைகள் வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். பண்ருட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சிவா, அவைத்தலைவர் சுந்தரம், ஒறையூர் தலைவர் புஷ்பாவதி சிவச்சந்திரன், சின்னப்பேட்டை தலைவர் முருகன், மாவட்ட விவசாய அணி தனபால், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், நகர இணை செயலாளர் ராமலிங்கம், வார்டு செயலாளர்கள் ஐயப்பன், ஆறுமுகம், நமச்சிவாயம், ஷபீர், முரளி, நகர துணை செயலாளர் சவுந்திரராஜன், பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் ரங்கப்பன், கணேசன், கவுன்சிலர்கள் சுரேஷ், முருகையன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ