உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல்: 5 பேர் மீது வழக்கு

கடலுார்: கடலுாரில், வீட்டு முன்பு கழிவு நீர் ஓடியதை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.கடலுார் உண்ணாமலை செட்டிச்சாவடி விசாலி நகரை சேர்ந்தவர் பாஞ்சாலம், 62; இவரது வீட்டு கழிவுநீர் அருகே உள்ள உதயகுமார் 35; வீட்டு வழியாக ஓடியுள்ளது. இதனை உதயக்குமார் தட்டிகேட்டதால் தகராறு ஏற்பட்டு இரு தரப்பாக தாக்கி கொண்டனர்.உதயக்குமார், அவரது தந்தை சண்முகம், தாய் பெரியநாயகி ஆகியோர், பாஞ்சாலம் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமியை தாக்கினர். பாஞ்சாலம் ஜெயலட்சுமி ஆகியோர் உதயகுமாரை தாக்கினர். இதில், படுகாயமடைந்த பாஞ்சாலம், உதயக்குமார் இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து பாஞ்சாலம், உதயக்குமார் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் உதயகுமார், சண்முகம், பெரியநாயகி, பாஞ்சாலம், ஜெயலட்சுமி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ