மேலும் செய்திகள்
தேயிலை வரத்து அதிகரிப்பு ;விவசாயிகள் மகிழ்ச்சி
25-Aug-2024
கடலுார்: வாழையில் குலை வரும் நேரத்தில் இலைக்கருகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், மலை கிராமங்களான வழிசோதனைப்பாளையம், சீரக்குப்பம், ராமாபுரம் கிழக்கு, மேற்கு, ஒதியடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், அரசடிக்குப்பம், புலியூர், சமட்டிக்குப்பம், வசனங்குப்பம், சின்னதானங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வாழை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.தற்போது வாழை மரம் நன்கு வளர்ந்து குலை தள்ளும் பருவத்தில் இலை கருகல் நோய் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் வாழை குலை நேர்த்தியில்லாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.மேலும் அப்பகுதிகளில் பல இடங்களில் இளம் வாழைக்கன்றுகள் போடப்பட்டுள்ளன. பெரிய மரத்தில் இருந்து இலைக்கருல் நோய் பரவி சிறிய இளம் கன்றுகளுக்கு பரவிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுவாக சத்து குறைபாடு காரணமாக, வாழை இலைகள் காய்ந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட விவசாயி, அந்த நிலத்தில், தொடர்ச்சியாக வாழை சாகுபடி செய்து வந்திருக்க வேண்டும். இதனால், நிலத்தில் பாஸ்பரஸ் சத்து குறைபாடு உருவாகியுள்ளது. இதன்காரணமாகவே, வாழை இலைகள் காய்ந்து வருகின்றன. இதற்கு மண் வழியாக தேவையான உரம் கொடுப்பதைவிட, நீரில் கரையக்கூடிய பாஸ்பரஸை, வாழை இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், இலைகள் காய்வது குறையும். மேலும், அடி உரம் போட்டிருக்க வேண்டும்.இலைகளில் பச்சைத் தன்மை இருந்தால்தான், ஒளிச்சேர்க்கை வாயிலாக, தாரில் உள்ள வாழைக்காய் நன்கு வளரும். இலையில் பச்சையம் குறைவாக இருந்தால், மகசூல் குறையும். எனவே, இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால், வாழை இலைகள் மீது, பாஸ்பரஸ் கரைசலை தெளிக்க வேண்டும் எனக் கூறினர்.
25-Aug-2024