உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள் புவனகிரியில் விவசாயிகள் கண்ணீர்

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள் புவனகிரியில் விவசாயிகள் கண்ணீர்

வீராணத்தில் இருந்து சந்திரன் வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு, கீரப்பாளையம் ஒன்றியம் புத்தூர், பண்ணப்பட்டு, முகையூர், கொடியாளம் உள்ளிட்ட சுற்று பகுதி கிராமங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். பருவமழை பொய்த்தது மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டு காரணமாக காலம் காலமாக செய்து வந்த முப்போக சாகுபடி இப்பகுதியில் ஒரு போகம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த மாதம் பெய்த திடீர் மழையால், வயல்களில் உழவு செய்து சம்பா சாகுபடிக்கு வியாபாரிகள் தயாராகினர். மேலும் சம்பா விதை நேர்த்தி செய்து நாற்று முளைத்து செழித்து காணப் பட்டது. இந்நிலையில் விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடைப்பகுதிக்கு வந்து சேராததால் விதை நேர்த்தி செய்த விவசாயிகள் மிகவும் மன உளச்சல் அடைந்துள்ளனர். எனவே, பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கடை மடை பகுதிக்கு தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி