உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் மாணவி சதுரங்கத்தில் அசத்தல்

பெண்ணாடம் மாணவி சதுரங்கத்தில் அசத்தல்

பெண்ணாடம் : மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், பெண்ணாடம் அரசு பெண்கள் பள்ளி மாணவி இரண்டாமிடம் பிடித்து அசத்தினார்.அரியலுார் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான, மகளிர் சதுரங்க போட்டிகள், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளியில் நடந்தது. இதில், பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி சார்பில், மாணவிகள் சர்மி, பிரபாவதி, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேர் பங்கேற்றனர். பங்கேற்ற சர்மி மாவட்ட அளவில் அதிக புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், பிரபாவதி 6ம் இடம், ஜெயஸ்ரீ 7ம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை