சார் பதிவாளர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணை உற்றி, பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகள் மேரிபா மணி, 36. இவர் விவாகரத்து பெற்று தனது 15 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது தாய் விஜயசாமுண்டீஸ்வரி பெயரில், மங்கலம்பேட்டை அடுத்த ஏ.சாத்தனுாரில் 5 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தினை அதேபகுதியைச்சேர்ந்த கலைச்செல்வி என்பவருக்கு விஜயசாமுண்டீஸ்வரி விற்பனை செய்துள்ளார்.இதனை மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று பதிவு செய்தனர். இதையறிந்த மேரிபா மணி, மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, மண்ணெண்ணை உற்றி தற்கொலைக்கு முயன்றார்.உடன், அருகில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் மீது தான் வழக்கு தொடுத்துள்ளதாக மேரிபா கூறினார்.இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அவர் அங்கிருந்து சென்றார்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.