உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீப்பற்றி எரிந்த குடிசை வீடு நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

தீப்பற்றி எரிந்த குடிசை வீடு நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. நெல்லிக்குப்பம் மோரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சீசம்மாள். இவரது கூரை வீடு நேற்று அதிகாலை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. தீ பற்றி எரிந்த வெப்பம் தாங்க முடியாமல், வீட்டிற்குள் துாங்கி கொண்டிருந்த சீசம்மாள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தவகல் அறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இதில், சீசம்மாள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. சீசம்மாள் வீட்டின் அருகில் இருந்த கார்த்திக் என்பவரது வீட்டின் சமையல் கொட்டையும் எரிந்து சேதமானது. தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களும், ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை