மேலும் செய்திகள்
மலையாண்டவர் கோவில் சித்தருக்கு சிறப்பு பூஜை
14-Mar-2025
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.,பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து. ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் குழுவினர் செய்திருந்தார்.
14-Mar-2025