உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பைகள் அள்ளுவதில்லை: பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் புகார்

குப்பைகள் அள்ளுவதில்லை: பண்ருட்டி நகராட்சி கூட்டத்தில் புகார்

பண்ருட்டி: பண்ருட்டி நகர பகுதியில், குப்பைகள் முறயைாக அள்ளுவதில்லை என, கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.பண்ருட்டி நகராட்சி கூட்டம் சேர்மன் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் சிவா, உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. அப்போது, ஆனந்தி (தி.மு.க.,) பேசுகையில், நகரில் குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை.ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் இடையே போட்டி காரணமாக பணிகள் சரிவர நடப்பதில்லை என்றார். இதே கருத்தை வலியுறுத்தி கதிர்காமன் (தி.மு.க.) பேசுகையில், நிரந்தர பணியாளர்கள் பலர் கையெழுத்து போட்டு வேலை செய்வதில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதேபோன்று ரமேஷ் (தி.மு.க.), கார்த்திகேயன்(வி.சி.,), ராமதாஸ் (சுயே) ஆகியோரும் நகரில் குப்பைகள் அகற்றாத புகார்களை தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்து, சுகாதார அலுவலர் குணசேகரன் பேசுகையில், 97 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 99 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். ஒப்பந்ததாரர்கள் பணிகள் திருப்தியாக இல்லை என புகார் வந்தது. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.மீண்டும் சரியில்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை