உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கடலுார்: நெய்வேலி புத்தக கண்காட்சியில், மாவட்ட குழுந்தைகள் நலக்குழு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.நெய்வேலில் புத்தகக் கண்காட்சியின் 8ம் நாள் நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இணையவழி குற்றங்களுக்கான அரசு உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைல்டு லைன் உதவி எண் 1098, இணைய வழி குற்றங்களுக்கான உதவி எண் 1930 குறித்து, மாணவர்களிடையே போட்டி நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், என்.எல்.சி., கல்வி விளையாட்டு, கலாசார துறை துணை பொதுமேலாளர் பிரபாகரன், மக்கள் சேவை அமைப்பின் பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி