உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிரந்தர முதல்வர் இல்லாமல் தள்ளாடும் அரசு கல்லுாரி

நிரந்தர முதல்வர் இல்லாமல் தள்ளாடும் அரசு கல்லுாரி

சிதம்பரம் அடுத்த சி.முட் லுாரில் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக் கின்றனர்.கல்லுாரியில், கடந்த ஆறு மாதமாக நிரந்தர முதல்வர் இல்லாததால் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாமல் கல்லுாரி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.கல்லுாரியில் மாணவர்களுக்கு குடிநீர், கழிவரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, யாரிடம் சொல்வது என, புலம்புகின்றனர். ஆசிரியர்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த மாதம் கல்லுாரி மாணவி ஒருவருக்கு, ஆய்வக உதவியாளர் பாலியல் தொல்லை கொடுக்க, பாதிக்கப்பட்ட மாணவி, கல்லுாரி நிர்வாகத்திடம் புகார் செய்தும், முதல்வர் இல்லாததால், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டப்பட்டது.இதனால், பாதிக்கப்பட்ட மாணவி சிதம்பரம் போலீசில் புகார் கொடுக்க, ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இப்பிரச்னையில், கல்லுாரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் நமக்கு ஏன் பிரச்னை என்று ஒதுங்கிவிட்டனர்.இச்சம்வத்தை தொடர்ந்து, மாணவ, மாணவர்களின் பெற்றோர் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பிரசனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், கல்லுாரிக்கு நிரந்தர முதல்வர் பணியில் அமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை