உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை

கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை

கடலுார் : ''கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என, கிருஷ்ணா மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:கடலுார் மற்றும் அண்டை மாவட்டங்களில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்க பிரத்யேகமான மருத்துவமனை அரசு மற்றும் தனியார் துறையில் இல்லாததது குறையாக இருந்தது.குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் பெரு நகரங்களில் புற்று நோய்க்கான கிகிச்சை பெற வேண்டிய நிலையில், அவதியும், பாதிப்பும் அடைந்தனர்.இதனை போக்கும் வகையில், கடலுார் கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, கடலுார் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்கள் பல ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். புற்று நோய்க்கு தேவைப்படும் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்படுகிறது. இங்குள்ள 'எலக்டா சைனர்ஜி மல்டி எனர்ஜி லைனர் ஆக்சிலேட்டர்' என்ற இயந்திரம் துல்லியமாகவும், புற்றுநோயுள்ள பகுதிகளை மட்டும் அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது. குறிப்பாக, இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் நோயின் தன்மையை அறியலாம்.புற்றுநோய் பூரணமாக குணமடைய தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாக கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ