| ADDED : ஜூலை 28, 2024 04:39 AM
கடலுார் : கடலுார் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, பராசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடந்தது.கோவிலில் 26ம் தேதி காலை கணபதிஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, மதியம் சாகை வார்த்தலும், மாலை செடல் உற்சவம் நடந்தது. எஸ்.பி.,ராஜாராம், அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் டி.எஸ்.பி., பிரபு உட்பட ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன், டாக்டர் பிரவீன்அய்யப்பன் ஆகியோர் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கினர். தொழிலதிபர் உமாசந்திரன், சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள்ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர்செந்தில், கோவில் அறங்காவலர்கள் குமார், ராமு, குமாரவேல், பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.