உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயலில் ஆடுகள் கிடை கட்டுவது அதிகரிப்பு

வயலில் ஆடுகள் கிடை கட்டுவது அதிகரிப்பு

புவனகிரி: புவனகிரி வயல்களில் இயற்கை உரத்திற்காக, ஆடுகள் கிடை கட்டுவது அதிகரித்துள்ளது.புவனகிரி சுற்றுபகுதி கிராமங்களில் விவசாயிகள் சம்பா அறுவடைவக்கு பின் கால்நடைகளை கொண்டு வயல்களில் கிடை கட்டி, இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புவனகிரி பகுதி கிராமங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஓட்டி வரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் புஞ்சை நிலங்களில் கிடை கட்டி வருகின்றனர்.அந்த வகையில், தற்போது அறுவடை முடிந்துள்ள நிலையில், புவனகிரி பகுதி வயல்வெளிகளில் விவசாயிகள் இயற்கை உரத்திற்காக ஆடுகளை கிடை கட்டி வருகின்றனர். அதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து லாரிகள் மூலம் ஆடுகளை, அதன் உரிமையாளர்கள் கொண்டுவந்துள்ளனர். விவசாயிகளிடம் முன்பணம் பெற்று, கிடை கட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை