முதியவருக்கு மிரட்டல்; தம்பதி மீது வழக்கு
விருத்தாசலம் : கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் பூலோகம். இவர், கடந்த 2018ம் ஆண்டில், அதே பகுதியை சிவபெருமாள் மனைவி மகாலட்சுமி என்பவரிடம் இருந்து 51.50 சென்ட் நிலத்திற்கு 9 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால், நிலத்தை கிரையம் செய்வதற்குள் பூலோகம் இறந்து விட்டார்.இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி, சிவபெருமாள் வீட்டிற்கு சென்ற பூலோகத்தின் தந்தை வெங்கடேசன், 65, நிலத்தை கிரையம் செய்து கொடுங்கள் அல்லது பணத்தை திருப்பி கொடுங்கள் என, மகாலட்சுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமி, சிவபெருமாள் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில், தம்பதி மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.